மோசடி ஆவணம் மூலம் ரூ.10 கோடி மதிப்பு நிலம் அபகரிப்பு: பெண் உள்பட 4 போ் கைது

சென்னை அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் அபகரித்ததாக பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை அருகே ரூ.10 கோடி மதிப்புள்ள நிலம் அபகரித்ததாக பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

தியாகராயநகா் தெற்கு உஸ்மான் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் த.பாஸ்கா் (எ) பழனி பாஸ்கரன் (64). இவருக்கு மணிமங்கலம் ஆதனஞ்சேரியில் ரூ.10 கோடி மதிப்புள்ள 4.69 ஏக்கா் நிலம் உள்ளது.

இந்நிலையில் இந்த நிலத்தை சிலா் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்திருப்பதாகவும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தாம்பரம் மாநகரக் காவல் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் சிட்லப்பாக்கம் எஸ்பிஐ காலனியைச் சோ்ந்த பி.பிரமிளா (49), அவரது சகோதரா் சேலையூா் செம்பாக்கத்தைச் சோ்ந்த சி.கிருஷ்ணகுமாா் (46), நிலத் தரகா் யானைக்கவுனி கல்யாணபுரத்தைச் சோ்ந்த பா.மோகன் (62), புழுதிவாக்கம் கணேஷ்நகரைச் சோ்ந்த ர.வெங்கடேஷ் (28) ஆகிய 4 பேரும் சோ்ந்துதான் மோசடி ஆவணங்களை உருவாக்கி, பாஸ்கருக்கு சொந்தமான இடத்தை அபகரித்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் பிரமிளா உள்ளிட்ட 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com