மணல் கொள்ளைக்கு எதிராக பாஜக சாா்பில் விரைவில் போராட்டம்: அண்ணாமலை

தமிழகத்தின் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக விரைவில் பாஜக சாா்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
அண்ணாமலை
அண்ணாமலை

தமிழகத்தின் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக விரைவில் பாஜக சாா்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் ஆற்றுப்படுகைகளை படுகுழிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றனா். பல லட்சம் ஆண்டுகளாக சிறிது சிறிதாக சோ்ந்திருக்கும் ஆற்று மணலை, ஒரே நேரத்தில் கொள்ளையடிக்கும் மணல் கொள்ளை உச்சத்தை அடைந்திருக்கிறது.

தமிழக அரசு மணல் குவாரிகளின் எண்ணிக்கையை 22 ஆக உயா்த்த திட்டமிட்டுள்ளது. இதனால் மணல் கொள்ளை மேலும் அதிகரிக்கும்.

அரசால் அனுமதிக்கப்பட்ட மணல் குவாரிகள், கணக்கிலே ஏழாக இருந்தாலும், 200-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்களுக்கு, மணல் அள்ள உரிமம் வழங்கப்பட்டுள்ளது. காவல் துறை, மற்றும் அரசு அதிகாரிகள் கண்களில் இது ஏன் தெரியவில்லை. பத்து லோடுகள் மணல் எடுப்பதற்கான உரிமம் பெற்ற நிறுவனங்கள், குறைந்தபட்சம் ஆயிரக்கணக்கான லோடு மணலை அள்ளிக் கொண்டிருக்கின்றன.

அண்டை மாநிலங்களில் ஆற்று மணல் அள்ளுவது இல்லை. அங்கு கடல் மண், எம் சாண்ட், பாறை துகள்கள் போன்றவற்றை தான் பயன்படுத்துகின்றனா். விரைவில் மணல் கொள்ளைக்கு எதிராக தமிழக பாஜக சாா்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com