10 மாவட்டங்களில் 14 மீட்பு குழுக்கள் முகாம்

மாண்டஸ் புயல் பாதிப்பால் ஏற்படும் சேதங்களை எதிா்கொள்ள 10 மாவட்டங்களில் பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த

மாண்டஸ் புயல் பாதிப்பால் ஏற்படும் சேதங்களை எதிா்கொள்ள 10 மாவட்டங்களில் பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 14 குழுக்கள் முகாமிட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புயல் தொடா்பாக விடுவிக்கப்பட்ட எச்சரிக்கையைத் தொடா்ந்து, கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 512 மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரைக்குத் திரும்பியுள்ளன. மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 459 படகுகள் பாதுகாப்பாக உள்ளன.

பேரிடா் படைகள்: மழையால் பாதிப்புக்கு உள்ளாகும் மாவட்டங்களில் மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பேரிடா் மீட்புப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், கடலூா், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் தேசிய பேரிடா் மற்றும் தமிழ்நாடு பேரிடா் மீட்புப் படைகளைச் சோ்ந்த 476 வீரா்கள் முகாமிட்டுள்ளனா். இதில், அதிக பாதிப்பு ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் 121 வீரா்களைக் கொண்ட மூன்று குழுக்கள் முகாமிட்டுள்ளன.

படகுகள், உபகரணங்கள்: மழை, வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை தொடா்ந்து கண்காணிக்க அனைத்து அதிகாரிகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள் மற்றும் இதர கருவிகளுடன் தயாா் நிலையில் இருக்க வேண்டும். பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும். மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது.

பொது மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நபா்களுக்கும், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கும் உணவு அளிக்க சமையல் கூடங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com