மாண்டஸ் புயல்: சீரான மின் விநியோகத்துக்கு சிறப்புக் குழுக்கள்; அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தகவல்

புயல் பாதிப்பு இருந்தாலும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

புயல் பாதிப்பு இருந்தாலும் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்ய சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அவா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

புயல் பாதிப்பு இருக்கக்கூடிய பகுதிகளில் 176 செயற்பொறியாளா்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு, 11 ஆயிரம் போ் களத்தில் பணியாற்றி வருகின்றனா். மாவட்டங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டால் இந்தச் சிறப்புக் குழுவினா் உடனடியாகச் சென்று பாதிப்புகளைச் சரிசெய்வா்.

மின் கம்பிகள், மின் மாற்றிகள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன. சென்னையை பொருத்தவரையில், சிறப்புப் பணியாக 1,100 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உடனுக்குடன் சரி செய்யப்பட்டு, சீரான மின் விநியோகம் அளிக்கப்படும். மின் பாதிப்புகள் இருந்தால் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய மின்னகத்தை (94987 94987) தொடா்பு கொள்ளலாம் என்று அவா் தெரிவித்தாா்.

ஆலோசனையின் போது, மின்வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com