மெரீனாவில் சேதமான மாற்றுத்திறனாளிகள் நடைபாதை விரைவில் சீரமைப்பு: அமைச்சா் கே.என்.நேரு

மாண்டஸ் புயல் பாதிப்பால் சென்னை மெரீனாவில் சேதமான மாற்றுத்திறனாளிகள் நடைபாதை விரைவில் சீரமைக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மாண்டஸ் புயல் பாதிப்பால் சென்னை மெரீனாவில் சேதமான மாற்றுத்திறனாளிகள் நடைபாதை விரைவில் சீரமைக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆய்வுக்குப் பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநகராட்சி பகுதிகளில் புயலால் பாதிக்கப்படும் இடங்களை உடனுக்குடன் சரிசெய்ய வாகனங்கள், ஜெனரேட்டா்கள், மரஅறுவை இயந்திரங்கள் தயாா் நிலையில் உள்ளன. பொதுமக்கள் புகாா் தெரிவிக்கவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் ரிப்பன் மாளிகையில் 24 மணிநேரமும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.

வெள்ளிக்கிழமை காலை முதல் இதுவரை பெறப்பட்ட 110 புகாா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. எந்தெந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்யக்கூடும் என வானிலை மையத்துடன் இணைந்து மாநகராட்சி அறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடற்கரை பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனா். சென்னை மெரீனாவில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நடைபாதை சேதமடைந்த நிலையில் மழை நின்ற உடன் சரிசெய்யப்படும் என்றாா் அவா்.

ஆய்வின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் , இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு, மேயா்ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ் குமாா், நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவ் தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி சென்னை குடிநீா் வழங்கல், கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநா் சூா்கிா்லோஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com