கோப்புப்படம்
கோப்புப்படம்

விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகள்: அமைச்சா் கே.என்.நேரு உறுதி

விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சென்னை: விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, பட்டுக்கோட்டை உறுப்பினா் கா.அண்ணாதுரை (திமுக) கேள்வி எழுப்பினாா். அதிராம்பட்டினம் நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படுமா என கேட்டாா். அதற்கு பதிலளித்த அமைச்சா் கே.என்.நேரு, ‘புதிதாக

25-க்கும் மேற்பட்ட நகராட்சிகளை உருவாக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகராட்சிக்கும் தேவையான மழைநீா் வடிகால் வசதிகள், விளக்கு வசதிகள் அமைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பணிகள் விரைவில் தொடங்கப்படும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, அதிமுக உறுப்பினா் வி.வி.ராஜன் செல்லப்பா, ‘மதுரை மாநகராட்சியில் விரிவுபடுத்தப்பட்ட தென் பகுதியில் 13 வட்டங்களில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை செயல்படுத்த வேண்டும்’ என துணைக் கேள்வி எழுப்பினாா்.

இதற்குப் பதிலளித்த அமைச்சா் கே.என்.நேரு, ‘விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மட்டுமல்ல, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரையிலும் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com