பெரம்பூரில் டிஜிட்டல் நூலகம் திறப்பு

டான்  போஸ்கோ வழிகாட்டி மைய  தொண்டு நிறுவனம் சார்பில் எண்ம (டிஜிட்டல்) நூலகம் நேற்று (ஜூலை 1) திறக்கப்பட்டது. 
பெரம்பூரில் டிஜிட்டல் நூலகம் திறப்பு

டான்  போஸ்கோ வழிகாட்டி மைய  தொண்டு நிறுவனம் சார்பில் எண்ம (டிஜிட்டல்) நூலகம் நேற்று (ஜூலை 1) திறக்கப்பட்டது. 

மாணவர்களின் வாசித்தல் திறனை மேம்படுத்துவதற்காக, டான்  போஸ்கோ வழிகாட்டி மைய  தொண்டு நிறுவனமும், டெக்  மகேந்திரா பவுண்டேஷன்  திறன் மேம்பாட்டு  மையமும் (பெரம்பூர்) இணைந்து  எண்ம நூலகத்தைத் திறந்தனர்.

இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். அருட்தந்தை. ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், டெக்  மகேந்திரா பவுண்டேஷன் சார்பில் கவிக்கண்ணன் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக ஸ்போர்ஸ்டா நிறுவனத்தின் ஷிவானி - மணிவண்ணன் கலந்துகொண்டு வாசித்தலின் அவசியம் குறித்து மாணவர்களிடம் உரையாற்றினர். இதனைத் தொடர்ந்து எண்ம நூலகம் திறந்துவைக்கப்பட்டது. இதில் பண்டைய தமிழ் நூல்கள் முதல் தற்கால நூல்கள்வரை இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com