சக்தி மசாலாவின் விருட்சம் திட்டத்தில் 17 மாணவ, மாணவியர் பயன்!

சக்தி மசாலாவின் விருட்சம் திட்டத்தில் பயனடைந்த மாணவ, மாணவியர்  அறக்கட்டளையினருக்கு நன்றி தெரிவித்தனர்.
சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள்.
சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள்.


ஈரோடு: சக்தி மசாலாவின் விருட்சம் திட்டத்தில் பயனடைந்த மாணவ, மாணவியர்  அறக்கட்டளையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

சக்தி மசாலா நிறுவனத்தின் சக்தி தேவி அறக்கட்டளை சார்பில் விருட்சம் திட்டம் 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய விவசாய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். 

விருட்சம் திட்டத்தின் மூலம் கல்வி ஆண்டு 2018-19 இல் திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் 8 மாணவ, மாணவியருக்கு பொறியியல் பட்டப்படிப்பிற்கும் மற்றும் வேளாளர் மகளிர் கல்லூரியில் 17 மாணவிகளுக்கு இளங்கலை பட்டப்படிப்பிற்கும் முறையே நான்கு , மூன்று ஆண்டுகளுக்கான கல்விக்கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் முழுவதும் வழங்கப்பட்டது. 

மாணவர்களது கல்லூரி படிப்பை எவ்வித தடையுமின்றி நிறைவு பெற செய்து, சில மாணவர்கள்  உயர்கல்வி வாய்ப்பினையும், சில மாணவர்கள் வளாகத் தேர்வின் மூலம் சிறந்த நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பினையும் பெற்றுள்ளனர்.  

சக்திதேவி அறக்கட்டளையின் அறங்காவலர்கள் டாக்டர் பி.சி.துரைசாமி மற்றும் டாக்டர் சாந்திதுரைசாமி ஆகியோருக்கு விருட்சம் திட்டத்தில் பயன்பெற்ற மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com