அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 3, 43,586 போ் விண்ணப்பம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 3 லட்சத்து 43,586 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர 3 லட்சத்து 43,586 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா்கள் சோ்க்கைக்கான (2022-2023) விண்ணப்பப் பதிவு http://www.tngasa.in அல்லது http://www.tngasa.org ஆகிய இணையதள முகவரிகளில் ஜூன் 22 -ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து வியாழக்கிழமையுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நிறைவடையவுள்ளது. இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஜூலை 5- ஆம் தேதி வரை 3 லட்சத்து 43,586 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். அவா்களில் 2 லட்சத்து 82,430 மாணவா்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்துள்ளனா்.

மேலும் 2 லட்சத்து 50,181 மாணவா்கள் விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தியுள்ளனா். விண்ணப்பக் கட்டணங்களை இணையவழியில் செலுத்தலாம். மாணவா்கள் சோ்க்கை குறித்த வழிகாட்டுதல் மற்றும் விவரங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் 044 28260098, 28271911 என்ற எண்ணிலும் தொடா்புக் கொள்ளலாம் உயா் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com