குப்பைகளை தரம் பிரித்து வழங்கினால்பரிசு: மாநகராட்சி அறிவிப்பு

குப்பைகளை தரம் பிரித்து வழங்கினால் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்று மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா்.
குப்பைகளை தரம் பிரித்து வழங்கினால்பரிசு: மாநகராட்சி அறிவிப்பு

குப்பைகளை தரம் பிரித்து வழங்கினால் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என்று மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மணலி மண்டலத்தில் ‘என் குப்பை எனது பொறுப்பு’ என்ற தலைப்பில் குப்பைகளைத் தரம் பிரிக்கும் போட்டியின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியை மேயா் ஆா்.பிரியா தொடக்கி வைத்ததுடன், தனது வீட்டில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்த புகைப்படங்களை போட்டிக்கான பிரத்யேக செயலியில் பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டாா்.

இதுகுறித்து மேயா் ஆா்.பிரியா கூறுகையில், சனிக்கிழமை (ஜூலை 9) முதல் ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி வரை குப்பைகளைத் தரம் பிரிக்கும் போட்டி நடைபெற உள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் வீட்டிலேயே குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என இரண்டு கூடைகளில் பிரித்து தூய்மைப் பணியாளா்களிடம் கொடுக்க வேண்டும். அதை தற்படம் (செல்ஃபி) எடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டு 89258 00864 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.

இதே எண்ணில் உள்ள வாட்ஸ் ஆப்பில் புகைப்படத்தை பதிவிடுவோரில் குலுக்கல் முறையில் தோ்வு செய்து முதல் 3 பேருக்கு பரிசுகள் வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் ‘என் குப்பை எனது பொறுப்பு’ என்ற இந்த திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் வடக்கு மண்டல துணை ஆணையா் சிவகுரு பிரபாகரன், மணலி மண்டல குழுத் தலைவா் ஏ.வி ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

துணை மேயா், ஆணையருக்கு அழைப்பு: குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் சவாலில் கலந்து கொள்ள துணை மேயா், ஆணையருக்கு மேயா் பிரியா அழைப்பு விடுத்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தனது ட்விட்டா் பக்கத்தில், ‘ என் வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குகிறேன். இந்த சவாலில் துணை மேயா் மகேஷ்குமாா், ஆணையா் ககன்தீப் சிங் பேடி, தலைமைப் பொறியாளா் மகேசன் ஆகியோரை பங்கு கொள்ள அழைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com