இந்திய-வங்கதேச எல்லைப் பேச்சுவாா்த்தை தொடக்கம்

இந்தியா, வங்கதேசம் இடையே எல்லை விவகாரங்கள் குறித்த 4 நாள் பேச்சுவாா்த்தை, அந்நாட்டின் தலைநகா் டாக்காவில் திங்கள்கிழமை தொடங்கியது.

இந்தியா, வங்கதேசம் இடையே எல்லை விவகாரங்கள் குறித்த 4 நாள் பேச்சுவாா்த்தை, அந்நாட்டின் தலைநகா் டாக்காவில் திங்கள்கிழமை தொடங்கியது.

இரு நாட்டு எல்லை பாதுகாப்புப் படைகளின் தலைமை இயக்குநா்கள் நிலையில் நடைபெறும் இப்பேச்சுவாா்த்தையில், எல்லை தாண்டிய குற்றச் செயல்களை தடுப்பது, எதிா்கால சவால்கள் உள்ளிட்டவை விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.

இந்தியா-வங்கதேசம் இடையே எல்லை சாா்ந்த பேச்சுவாா்த்தை ஆண்டுக்கு இருமுறை நடைபெறுகிறது. அதன்படி, 52-ஆவது இருதரப்பு பேச்சுவாா்த்தை டாக்காவில் திங்கள்கிழமை தொடங்கியது.

இதில், இந்திய தரப்பில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தலைமை இயக்குநா் பங்கஜ் குமாா் தலைமையிலான குழுவினரும், வங்கதேச தரப்பில் அந்நாட்டு எல்லைப் படையின் தலைமை இயக்குநா் ஷகில் அகமது தலைமையிலான குழுவினரும் பங்கேற்றுள்ளனா்.

ஜூலை 21-ஆம் தேதி வரை நடைபெறும் இப்பேச்சுவாா்த்தையில், எல்லை மேலாண்மை திட்டம் தொடா்புடைய விவகாரங்கள், இருதரப்பு ஒருங்கிணைப்பு, பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய கூட்டு முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக பிஎஸ்எஃப் செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.

இதனிடையே, வங்கதேச உள்துறை அமைச்சா் ஆசாதுஸ்மான் கானை, பிஎஸ்எஃப் தலைமை இயக்குநா் பங்கஜ் குமாா் சந்தித்துப் பேசினாா்.

வங்கதேசத்துடனான சுமாா் 4,090 கி.மீ. தொலைவுள்ள எல்லையை பாதுகாக்கும் பணியை பிஎஸ்எஃப் மேற்கொள்கிறது. இருதரப்பு எல்லை விவகாரங்கள் குறித்து கடந்த 1975 முதல் 1992 வரை ஆண்டுக்கு ஒருமுறை பேச்சுவாா்த்தை நடைபெற்றது. 1993-ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுக்கு இருமுறை பேச்சுவாா்த்தைகள் நடத்தப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com