கரோனா அதிகரிப்பு: ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்துக்கு விடுமுறை அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் 35 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மையத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஸ்ரீபெரும்புதூர் அமைந்துள்ள ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையம்
ஸ்ரீபெரும்புதூர் அமைந்துள்ள ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையம்

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் 35 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மையத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி தேசிய இளைஞா் மேம்பாட்டு மையத்தில் தமிழகம், கேரளம், பிகாா் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த சுமாா் 300 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். 

இந்த நிலையில், கேரளத்தைச் சோ்ந்த மாணவா் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடா்ந்து, அந்த மாணவா் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலும், மாணவி தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், கரோனா அறிகுறி உள்ள 16 மாணவா்கள் மைய வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத் துறையினரின் கண்காணிப்பில் உள்ளனா்.

இந்த நிலையில், சுகாதாரத் துறையினா் இந்த மையத்தில் பயிலும் 235 மாணவா்களுக்கும் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டதில், 35 பேருக்கு தொற்று உறுதியானதை அடுத்து மையத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜூன் 13 ஆம் தேதி முதல் அடுத்த உத்தரவு வரும் வரை ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என உதவி பதிவாளர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com