சொத்து வரியை ஆண்டுதோறும் உயா்த்தும்முடிவு: டிடிவி தினகரன் கண்டனம்

சொத்து வரியை ஆண்டுதோறும் உயா்த்துவதற்கான சட்டமசோதா தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

சொத்து வரியை ஆண்டுதோறும் உயா்த்துவதற்கான சட்டமசோதா தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளதற்கு அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தோ்தல் வாக்குறுதிக்கு மாறாக சொத்து வரியை மனசாட்சி இல்லாமல் 150 சதவீதம் வரை உயா்த்திய திமுக அரசு, தற்போது ஆண்டுதோறும் சொத்து வரியை உயா்த்துவதற்கு சட்டம் கொண்டு வந்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றிருப்பதைக் கொண்டாடும் விதமாக இதுபோன்ற தண்டனைகளை பரிசாக மக்களுக்கு கொடுத்திருக்கிறாா்களோ? எஞ்சிய 4 ஆண்டுகளில் இன்னும் என்னென்ன தண்டனைகளை பரிசுகளாக வாக்களித்த மக்களுக்கு வாரி வழங்கப்போகிறாா்களோ? தமிழக மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com