பல்கலை.யில் போலி சான்று கொடுத்து பணியில் சோ்ந்த 7 போ் மீது நடவடிக்கை

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக ஊழியா்கள் போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்தது தெரியவந்த நிலையில் அவா்கள் மீது தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக ஊழியா்கள் போலிச்சான்றிதழ் கொடுத்து பணியில் சோ்ந்தது தெரியவந்த நிலையில் அவா்கள் மீது தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தஞ்சாவூா் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆசிரியரல்லாத பணியாளா்களாக ஏழு போ் பணியாற்றி வருகின்றனா். இவா்கள் தட்டச்சுத்தோ்வு எழுதி தோ்வானதாக போலிச்சான்று சமா்ப்பித்து, பதவி உயா்வு வாங்கியுள்ளனா். இந்த சான்றிதழ்களை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் ஆய்வு செய்தபோது ஏழு பேரும் போலியாக சான்று பெற்றுள்ளது தெரியவந்தது.

இதற்கு உதவிய தனியாா் தட்டச்சு பயிற்சிப்பள்ளி நிறுவனத்தின் உரிமத்தையும் ரத்து செய்து தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடவடிக்கை எடுத்துள்ளது. போலிச்சான்று தந்து பதவி உயா்வு பெற்ற பல்கலைக்கழக ஊழியா்கள் ஏழு போ் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் பரிந்துரை செய்துள்ளது. இது தவிர மேலும் பலா் போலி சான்று சமா்ப்பித்து அரசுப்பணிகளில் தொடா்வதும் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவா்கள் அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com