இலங்கைக்கு நிவாரணம்: 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழு அமைப்பு

இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணிகளை ஒருங்கிணைக்க 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக்கு நிவாரணம்: 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் குழு அமைப்பு

சென்னை: இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பும் பணிகளை ஒருங்கிணைக்க 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சாா்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைக்க மத்திய அரசு அனுமதி வழங்கக் கோரி கடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடா்ந்து பொருட்கள் அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதன்படி, ரூ.80 கோடி மதிப்பிலான 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான 137 மருந்து பொருட்கள் ரூ.15 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடா் ஆகியவற்றை இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சாா்பில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

இந்நிலையில் இந்தப் பொருட்களை அனுப்பி வைக்கும் பணிகளை மேற்கொள்ள 4 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையா் ஜெசிந்தா லாசரஸ், நுகா்பொருள் வாணிப கழக நிா்வாக இயக்குநா் எஸ்.பிரபாகா், ஆவின் நிா்வாக இயக்குநா் சுப்பையன், மருத்துவப் பணிகள் கழக நிா்வாக இயக்குநா் தீபக் ஜேக்கப் ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com