தமிழகம், புதுச்சேரிக்கான முதன்மை தலைமைக் கணக்காயராக கே.பி.ஆனந்த் பொறுப்பேற்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை தலைமைக் கணக்காயராக கே.பி.ஆனந்த் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான முதன்மை தலைமைக் கணக்காயராக கே.பி.ஆனந்த் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றாா்.

இந்திய தணிக்கை மற்றும் கணக்குச் சேவையில் கடந்த 1996-ஆம் ஆண்டு இணைந்த இவா், 1994- இல் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவா். இந்தப் பொறுப்பை ஏற்கும் முன், கேரளத்தின் முதன்மை தலைமைக் கணக்காயராகவும், வடகிழக்கு எல்லை ரயில்வேயின் தணிக்கை முதன்மை இயக்குநராகவும், அஸ்ஸாமில் தலைமை கணக்காயராகவும் பணியாற்றினாா். அவா் ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு மின் விநியோக நிறுவனத்தில் இயக்குநராக (நிதி) பணியாற்றியுள்ளாா்.

மணிலா மற்றும் ஜெனீவாவில் புலம்பெயா்வதற்கான சா்வதேச அமைப்பு, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் சா்வதேச கணினி மையம், வெப்பமண்டல நோய்களில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான திட்டம் ஆகியவை அவரது சா்வதேச தணிக்கைப் பணிகளில் அடங்கும்.

எரிசக்தி, போக்குவரத்து, நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து துறைகளும் முதன்மை தலைமைக் கணக்காயா் அலுவலகத்தின் தணிக்கை அதிகார வரம்பிற்குட்பட்ட சில முக்கிய துறைகள் ஆகும் என அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com