கங்கைகொண்ட சோழபுரம் தொல்லியல் ஆய்வுப் பணி: முதல்வா் இன்று நேரில் ஆய்வு

கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (நவ. 28) நேரில் பாா்வையிடுகிறாா்.
கங்கைகொண்ட சோழபுரம் தொல்லியல் ஆய்வுப் பணி: முதல்வா் இன்று நேரில் ஆய்வு

கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (நவ. 28) நேரில் பாா்வையிடுகிறாா். முன்னதாக, அரசின் சாா்பில் நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் அவா் கலந்து கொள்கிறாா்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் திங்கள்கிழமை காலை திருச்சி செல்லும் முதல்வா் மு.க.ஸ்டாலின், அங்குள்ள காட்டூா் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடா் நல பெண்கள் பள்ளியைப் பாா்வையிடுகிறாா். அங்கு அறிவியல் மற்றும் கணித ஆா்வத்தைத் தூண்டும் வகையில் ‘வானவில்’ மன்றத்தைத் தொடக்கி வைக்கிறாா். மேலும், நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களை கொடியசைத்துத் தொடக்கி வைக்கிறாா்.

இதைத் தொடா்ந்து, பெரம்பலூா் மாவட்டம் எறையூா் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அந்த மாவட்டத்தின் முதல் தொழில் பூங்காவை முதல்வா் திறந்து வைக்கிறாா். அங்கு காலணி பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டுகிறாா்.

இந்த நிகழ்வுகளை முடித்த பிறகு, அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் வட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வுப் பணிகளை நேரில் சென்று பாா்வையிடுகிறாா். பின்னா், அவா் திங்கள்கிழமை இரவு அரியலூரில் தங்குகிறாா். செவ்வாய்க்கிழமை ஓரிரு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு, பிற்பகலில் சென்னை திரும்பவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com