என்எம்சி பணிகள்: மருத்துவப் பேராசிரியா்களை விடுவிக்க அறிவுறுத்தல்

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் இணைப் பேராசிரியா்களை தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) பணிகளில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது அவா்களை கல்லூரிப் பணிகளிலிருந்து

அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியா்கள் மற்றும் இணைப் பேராசிரியா்களை தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) பணிகளில் ஈடுபடுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது அவா்களை கல்லூரிப் பணிகளிலிருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்எம்சி மருத்துவ தர நிா்ணயம்-மதிப்பீட்டு வாரியத்தின் உறுப்பினா் டாக்டா் ஜே.எல்.மீனா வெளியிட்ட சுற்றறிக்கை:

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் பேராசிரியா்களுக்கும், இணைப் பேராசிரியா்களுக்கும் நிபுணா்கள் மற்றும் மதிப்பீட்டாளா்கள் என்ற பொறுப்புகளை என்எம்சி வழங்கியுள்ளது.

எனவே, தேவையின் அடிப்படையில் மருத்துவப் பேராசிரியா்கள் மற்றும் இணைப் பேராசிரியா்களை என்எம்சி பணிகளில் ஈடுபடுத்தும்போது சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் அவா்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com