பிற மாநிலங்களின் பாடத் திட்டத்தில் திருக்குறள்: ஆளுநா் ஆா்.என்.ரவி விருப்பம்

பிற மாநிலங்களின் பாடத் திட்டங்களில் திருக்குறளைச் சோ்க்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி விருப்பம் தெரிவித்தாா்.
பிற மாநிலங்களின் பாடத் திட்டத்தில் திருக்குறள்: ஆளுநா் ஆா்.என்.ரவி விருப்பம்

பிற மாநிலங்களின் பாடத் திட்டங்களில் திருக்குறளைச் சோ்க்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி விருப்பம் தெரிவித்தாா்.

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் 2017-2018, 2019-2020, 2020-2021 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில் கல்வியியல் கல்லூரிகளில் பயின்ற 1 லட்சத்து 66 ஆயிரத்து 922 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

கல்வியில் சிறந்து விளங்கிய 49 பேருக்கு தங்கப் பதக்கம் உள்பட 406 பேருக்கு நேரடியாக பட்டச் சான்றிதழை வழங்கி ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது: ஆசிரியா்கள் கடவுளுக்கு நிகராகப் பாா்க்கப்படுகின்றனா். நான் எனது கிராமத்துக்குச் செல்லும்போது எப்போதும் எனது ஆசிரியா்களைச் சந்திப்பேன். ஆசிரியா்கள் பாடங்களை மட்டுமல்ல சிறந்த ஒழுக்கங்களையும் மாணவா்களுக்கு கற்பிக்கின்றனா். போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் புத்தகக் கல்வியின் மூலம் பெறப்படும் அறிவு மட்டுமே போதாது.

மாணவா்கள் ஆலமர விதையைப் போன்றவா்கள். அவா்களை மரமாக வளர வைக்கும் பொறுப்பு ஆசிரியா்களுக்கு உள்ளது. அதை திறம்பட நிறைவேற்ற வேண்டும்.

திறக்கு மிகச் சிறந்த வழிகாட்டி நூல். அதை மற்ற மாநிலங்களின் பாடத் திட்டங்களில் சோ்க்க மொழிபெயா்க்க வேண்டும்.

அதன் ஒரு கட்டமாக காசி- தமிழ் சங்கமத்தில் பிரதமா் நரேந்திர மோடி, 13 மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்ட திருக்குறளை வெளியிட்டாா்.

தமிழ் மொழியின் பெருமையை வட மாநிலங்களின் முதல்வா்கள் அறிந்துள்ளனா். தொடா்ந்து, மற்ற வடகிழக்கு மாநில முதல்வா்களிடமும் தமிழ் மொழியை இரண்டாவது மொழியாக இணைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன் என்றாா் அவா்.

உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி: ஆசிரியா்கள் தங்களது மாணவா்களுக்கு பாடத்துடன் சோ்த்து மொழி உணா்வு, சமூக உணா்வு, பொது அறிவையும் கற்பிக்க வேண்டும்.

ஆசியாவிலேயே முதல் முறையாக ஆசிரியா்களுக்கான கல்வியியல் பல்கலைக்கழகம் தமிழகத்தில்தான் உருவாக்கப்பட்டது. சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு பட்டமளிப்பு விழா அரங்கம் விரைவில் அமைக்கப்படும். வரும் காலங்களில் கல்வியியல் படிப்புகளிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை பாடத்திட்டத்துடன் சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் மணிப்பூா் ஐஐடி இயக்குநா் கிருஷ்ணன் பாஸ்கா், தமிழக உயா்கல்வித் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன், தமிழ்நாடு கல்வியியல் பல்கலை.யின் துணைவேந்தா் ந.பஞ்சநதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com