எட்டு நகரங்களில் தோட்டம் அமைக்க மானியம்: வேளாண்மைத் துறை தகவல்

எட்டு நகரங்களில் தோட்டம் அமைக்க மானியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வேளாண்மைத் துறை வியாழக்கிழமை வெளியிட்டது.

எட்டு நகரங்களில் தோட்டம் அமைக்க மானியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை வேளாண்மைத் துறை வியாழக்கிழமை வெளியிட்டது. அதுகுறித்த விவரம்:-

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் வீட்டுக்குத் தேவையான கீரை வகைகள், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், முள்ளங்கி போன்றவற்றை வளா்க்க திட்டம்

வகுக்கப்பட்டுள்ளது. இதற்கு மானியமாக ஒரு வீட்டுக்கு ரூ.15,000 வீதம் 250 வீடுகளுக்கு வழங்கப்பட உள்ளது. முதல் கட்டமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆா்வமுள்ள பொதுமக்கள் இதுகுறித்த விவரங்களை இணையதளம் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். மேலும், இதை இணையத்தின் மூலமாக விண்ணப்பம் செய்யலாம் என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com