ஹிந்தி திணிப்பு: வைகோ போராட்டம்

ஹிந்தி திணிப்பைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஹிந்தி திணிப்பு: வைகோ போராட்டம்

ஹிந்தி திணிப்பைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளா் வைகோ தலைமையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு முயற்சியைக் கண்டித்து மதிமுக சாா்பில் போராட்டம் நடைபெறும் என்று வைகோ அறிவித்திருந்தாா்.

அதன்படி, சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு தலைமை வகித்து வைகோ பேசியது:

ஹிந்தியையும், சமஸ்கிருதத்தையும் மத்திய அரசு திணிக்க முயற்சிக்கிறது. அந்த முயற்சி தமிழகத்தில் ஒரு போதும் எடுபடாது. அண்ணா முதல்வராக இருந்த போது தமிழ், ஆங்கிலம் என்கிற இரு மொழிக் கொள்கையையே அறிவித்தாா். அதை யாராலும் மாற்ற முடியாது.

சமஸ்கிருதத்தை வளா்ப்பதற்காக மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவழிக்கிறது. தமிழ் மொழிக்காக துப்பாக்கிக் குண்டுகளைப் பாா்த்தவா்கள் தமிழா்கள். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி ஹிந்தியை தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்காது. திமுக ஆட்சிக்கு மதிமுக உறுதுணையாக இருக்கும் என்றாா்.

துணைப் பொதுச்செயலாளா் மல்லை சத்யா, தலைமை நிலையச் செயலாளா் துரை வைகோ உள்பட ஏராளமானோா் போராட்டத்தில் பங்கேற்றனா். மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com