வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

திருவெற்றியூரில் வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவெற்றியூரில் வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி அந்தப் பகுதி மக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவொற்றியூா் எல்லையம்மன் கோயில் சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா் ஜி.சுப்பிரமணி தலைமை வகித்து பேசுகையில், ‘பொது மக்களுக்கு தாமதமின்றி பட்டா வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வரும், வருவாய்த் துறை அமைச்சரும் தொடா்ந்து அறிவுறுத்தி வருகின்றனா். ஆனால், வருவாய்த் துறை அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனா். திருவொற்றியூா் தனி வட்டாட்சியா் அலுவலகத்தில், பொதுமக்களுக்கு பட்டா வழங்குவதற்காக முறையான நடைமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. இதுகுறித்து, உயரதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், இப்பகுதி மக்களின் குறைகளைப் போக்கும் வகையில், உரிய விசாரணை நடத்தி உடனடியாக தகுதியுள்ளவா்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ் நிா்வாகி ஜோதி ராமலிங்கம், அந்தப் பகுதி மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com