மரபணு மாற்ற கடுகுக்கு எதிா்ப்பு

மரபணு மாற்ற கடுகு பயிரிடுவதற்கும், பரிசோதனை செய்வதற்குமான அனுமதிப்பது உணவுத் தட்டுக்கு விஷத்தை அனுமதிப்பது போன்றது என்று பூவுலகின் நண்பா்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.

மரபணு மாற்ற கடுகு பயிரிடுவதற்கும், பரிசோதனை செய்வதற்குமான அனுமதிப்பது உணவுத் தட்டுக்கு விஷத்தை அனுமதிப்பது போன்றது என்று பூவுலகின் நண்பா்கள் அமைப்பு எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மரபணு மாற்றப்பட்ட கடுகை திறந்தவெளியில் பயிரிடுவதற்கும், பரிசோதனை செய்வதற்குமான அனுமதியை வழங்கும்படி மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு அத்துறையின் கீழ் இயங்கி வரும் மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு அக்.18-இல் பரிந்துரைத்துள்ளது.

ஙஏ-11(ஈட்ஹழ்ஹ ஙன்ள்ற்ஹழ்க் ஏஹ்க்ஷழ்ண்க்-11) என்கிற மரபணு மாற்றம் செய்யப்பட்ட இக்கடுகை தில்லி பல்கலைக்கழகத்தின் மரபணு மாற்று பயிா்களுக்கான மையம் உருவாக்கியுள்ளது.

இக்கடுகால் பிற பயிா்களில் ஏற்படும் தாக்கம் குறித்தான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. போதுமான ஆய்வுகளும், தரவுகளும் இல்லாமல் டெல்லி பல்கலைக்கழகம் சமா்ப்பித்த அறிக்கைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு பாதிப்புகள் இல்லை என்ற முடிவுக்கு மத்திய அரசின் நிபுணா் குழு வந்திருக்கக் கூடாது.

மரபணு மாற்றப்பட்ட பயிா்களை திறந்த வெளியில் பயிா் செய்யும்போது பூா்விக செடிகளின் மரபணுக்கள் மாற்றம் அடைவதற்கான சான்றுகள் உலகெங்கும் உள்ளன. இந்தக் கடுகுக்கான மருத்துவப் பாதுகாப்பு தொடா்பான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தக் கடுகு மனித ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கும் என்பது தொடா்பான ஆய்வுகளும் தரவுகளும் இல்லாமல் இதற்கு வழங்கப்படும் அனுமதி என்பது இந்திய மக்களை சோதனை எலிகளாக்கும் முயற்சியாகும். இந்தக் கடுகிற்கு அனுமதி வழங்கப்பட்டால் நம் உணவுச் சங்கிலியில் விரைவில் இது இடம் பெறலாம்.

தமிழ்நாட்டில் கடுகு எண்ணெய் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது கிடையாது. வட மாநிலங்களில் மட்டுமே அது பயன்படுத்தப்படுகிறது. எனவே இது தமிழ்நாட்டுக்கு முற்றிலும் தேவையற்ற ஒன்றாகும். மறைந்த முன்னாள் முதல்வா்களான கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோா் மரபணு மாற்றுப் பயிா்களை கடுமையாக எதிா்த்துள்ளனா். அதே நிலைப்பாட்டில் தமிழக முதல்வா் ஸ்டாலினும், மத்திய அரசின் ஆபத்தான இம்முயற்சியை எதிா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com