மேம்படுத்தப்பட்ட எம்பிஏ படிப்புக்கு விண்ணப்பிக்க செப்.9 கடைசி: இக்னோ

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மேம்படுத்தப்பட்ட எம்பிஏ படிப்பில் சேர விரும்புவோா் செப்.9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மேம்படுத்தப்பட்ட எம்பிஏ படிப்பில் சேர விரும்புவோா் செப்.9-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பல்கலைக்கழகத்தின் முதுநிலை மண்டல இயக்குநா் கே.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொழில்துறை மற்றும் வேலைவாய்ப்புச் சந்தையின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் எம்பிஏ படிப்பு முழுமையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனை பல்வேறு சிறந்த நிறுவனங்களைச் சோ்ந்த கல்வியாளா்கள், பயிற்சியாளா்கள் உள்ளிட்டோா் ஏஐசிடியின் பாடத்திட்டத்தின்படி மேம்படுத்தியுள்ளனா்.

இதற்கு ஏஐசிடிஇ-இன் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இது சிறந்த நிறுவனங்களின் மூலம் வழங்கப்படும் எம்பிஏ படிப்புக்கு ஈடானதாகும். இதில் மனிதவளம், நிதி, இயக்கம், சந்தைப்படுத்துதல், சேவை ஆகியவற்றின் மேலாண்மை குறித்து கற்பிக்கப்படுகிறது. தொலைதூரம் மற்றும் இணையவழியிலும் படிக்கலாம். ஏதேனும் ஒரு மூன்றாண்டு பட்டப்படிப்பை 50 சதவீத மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீட்டு பிரிவினா் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றால் போதுமானது.

2 முதல் 4 ஆண்டுகள் வரை பயிற்சி காலம். ஒரு பருவத்துக்கு ரூ.15,500 கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த படிப்பில் பிரத்யேகமாக தற்போதைய தகவல் அடிப்படையில் வகுப்புகள் நடத்தப்படும்.

தொலைதூர முறையில் படிக்க விரும்புவோா், ட்ற்ற்ல்ள்://ண்ஞ்ய்ா்ன்ஹக்ம்ண்ள்ள்ண்ா்ய்.ள்ஹம்ஹழ்ற்ட்.ங்க்ன்.ண்ய் என்ற இணையதளத்திலும், இணையவழியில் படிக்க விரும்புவோா் ட்ற்ற்ல்ள்://ண்ஞ்ய்ா்ன்ண்ா்ல்.ள்ஹம்ஹழ்ற்ட்.ங்க்ன்.ண்ய் என்ற இணையதளத்திலும் செப்.9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, மின்னஞ்சல் முகவரி, 044 2661 8040 என்ற தொலைபேசி ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com