கால்நடை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பித்தவா்களுக்கு அதில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையவழியில் விண்ணப்பித்தவா்களுக்கு அதில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட இளநிலை கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்பு (பி.வி.எஸ்சி - ஏ.ஹெச்) மற்றும் 4 ஆண்டுகள் கொண்ட உணவுத் தொழில்நுட்பம், பால்வளத் தொழில்நுட்பம், கோழியின தொழில்நுட்பம் ஆகிய பிடெக் படிப்புகள் உள்ளன. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச் மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு 2022 - 23-ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவுஇணையதளத்தில் கடந்த 12-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும் இந்த படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் இணையவழியில் விண்ணப்பித்து வருகின்றனா்.

விண்ணப்ப அவகாசம் கடந்த 26-ஆம் தேதி மாலை 5 மணி வரை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது, மாணவா்களின் நலன் கருதி அக். 3-ஆம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில், மாணவா்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தம் செய்யவும், சான்றிதழ் நகல்களை பதிவேற்றம் செய்யவும் அக். 3-ஆம் தேதி இரவு 8 மணி முதல் அக். 6-ஆம் தேதி காலை 8 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அயல்நாடு வாழ் இந்தியா், அயல்நாடு வாழ் இந்தியா்களின் வாரிசுகள், அயல்நாடு வாழ் இந்தியரின் நிதி ஆதரவு பெற்றோா் மற்றும் அயல்நாட்டினருக்கு இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அக். 14-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப வழிமுறைகள், இதர விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com