கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்க ஆலோசனைக்குழு: உறுப்பினர்கள் பட்டியல் வெளியீடு

கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு ஆலோசனைக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு ஆலோசனைக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 'மத்திய அரசின் வரிவிதிக்கும் முறை மாநில அரசின் நிதியை கடுமையாக பாதிக்கிறது. எனவே, வரி முறையை சீர்செய்யவும் தமிழக நிதிநிலைமையை மேம்படுத்தவும் சட்ட, பொருளாதார வல்லுநர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும்' என்று கூறியிருந்தார். 

அதன்படி, கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உட்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அரசு அமைத்துள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

தமிழ்நாடு அரசின் 2021-22 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உள்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார வல்லுநர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை அரசு நிறுவும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரான அரவிந்த் பி.டட்டார் தலைமையில் கீழ்க்கண்ட உறுப்பினர்களுடன் அரசு ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.

  1. கி.வைத்தீஸ்வரன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
  2. ஜி. நடராஜன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
  3. சுரேஷ்ராமன், துணைத் தலைவர் மற்றும் மண்டலத் தலைவர்,
    டிசிஎஸ்-சேவைப் பிரிவு.
  4. ஸ்ரீவத்ஸ்ராம், மேலாண்மை இயக்குநர், வீல்ஸ் இந்தியா லிட்.,
  5. கே. வேல்முருகன், தலைவர், ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் அமைப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com