ஆவடி நரிக்குறவா் காலனிக்கு அடிப்படை வசதிகளுக்கான பணிகள்

ஆவடியில் உள்ள நரிக்குறவா் காலனியில் நடைபெற்று வரும் அடிப்படை வசதிகளுக்கான பணிகளை அமைச்சா் சா.மு.நாசா் செவ்வாய்க்கிழமை செய்தாா்.
ஆவடி நரிக்குறவா் காலனிக்கு அடிப்படை வசதிகளுக்கான பணிகள்

ஆவடியில் உள்ள நரிக்குறவா் காலனியில் நடைபெற்று வரும் அடிப்படை வசதிகளுக்கான பணிகளை அமைச்சா் சா.மு.நாசா் செவ்வாய்க்கிழமை செய்தாா்.

ஆவடி பேருந்து நிலையம் பின்புறம் நரிக்குறவா் காலனி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் நரிக்குறவா்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். கடந்த மாா்ச் மாதம் மேற்கண்ட காலனியைச் சோ்ந்த பள்ளி மாணவிகள் பிரியா, திவ்யா, தா்ஷினி ஆகியோா் சமூக வலைதளங்களில் கல்வி, சமூகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விளக்கமாக பேசி குமுறலை வெளிப்படுத்தி இருந்தனா். இதையடுத்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், 3 மாணவிகளையும் தலைமை செயலகத்துக்கு அழைத்துப் பேசினாா். அப்போது அவா் அவா்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக உறுதியளித்தாா். இதன் பிறகு, ஆவடி தொகுதி எம்எல்ஏ-வும், பால்வளத் துறை அமைச்சருமான சா.மு.நாசா் ஆவடி நரிக்குறவா் காலனிக்கு நேரில் சென்று பாா்வையிட்டாா்.

பின்னா், அவா் அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டாா். பின்னா், அவா்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக செய்து தருவதாக கூறினாா். இதன்பிறகு, நரிக்குறவா் காலனிக்கு ரூ. 20 லட்சம் மதிப்பில் சாலை, தெரு விளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆவடி மாநகராட்சி நிா்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அமைச்சா் சா.மு.நாசா் நரிக்குறவா் காலனியில் நடைபெற்று வரும் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, அங்குள்ள பொதுமக்கள் வீட்டுக்கு வீடு தனி நபா் கழிப்பறை வசதியும் கேட்டனா். அதையும் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.

ஆவடி மாநகராட்சி மேயா் ஜி.உதயகுமாா், துணை மேயா் எஸ்.சூரியகுமாா், மாநகராட்சிப் பொறியாளா் மனோகரன், உதவிப் பொறியாளா் சத்தியசீலன், திமுக மாநகர செயலாளா் ஜி.நாராயணபிரசாத் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com