பிரெய்லி வடிவில் 41 தமிழ்ச் செவ்வியல் நூல்கள்: செம்மொழி நிறுவனம் தகவல்

பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், 41 தமிழ்ச் செவ்வியல் நூல்களையும் சந்தி பிரித்து எளிய உரையுடன் பிரெய்லி நூல்களாக வெளியிடும் பணிகள் நடைபெற்று

பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், 41 தமிழ்ச் செவ்வியல் நூல்களையும் சந்தி பிரித்து எளிய உரையுடன் பிரெய்லி நூல்களாக வெளியிடும் பணிகள் நடைபெற்று வருவதாக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன் கூறியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், பல்வேறு வகையிலான தமிழ் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளப் புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மாதத்துக்கு குறைந்தது ஐந்து நூல்களை வெளியிட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு அதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

இணையவழியில் செம்மொழித் தமிழ்க் கல்வியைக் கற்றல், செவ்வியல் சுவடிகளைக் கணினியில் தேடுதல், பன்னாட்டு ஆய்விதழ் வெளியிடுதல், உலகளாவிய மொழிகளைத் தமிழ் மொழியுடன் ஒப்பிட்டு ஒப்பியல் ஆய்வுகளை மேற்கொள்ளுதல், பன்னாட்டு அளவிலான கருத்தரங்கங்களை நடத்துதல் முதலான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்.

அதேபோன்று புகழும், புலமையும் வாய்ந்த பேராசிரியா்களைக் கொண்டு செவ்விலக்கிய சிறப்புகளைக் காட்சிப்படுத்தி யூடியூப் மூலம் பரவச்செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் ஒரு அறிஞரை அழைத்துக் காட்சிப்படுத்தும் வகையில் புதிய வளாகத்தில் உரிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களில் செவ்வியல் தமிழ் இருக்கைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், ரியூனியன் ஆகிய நாட்டுப் பல்கலைக்கழகங்களில் செவ்வியல் தமிழ் இருக்கைகள் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில், 41 தமிழ்ச் செவ்வியல் நூல்களையும் சந்தி பிரித்து எளிய உரையுடன் பிரெய்லி நூல்களாக வெளியிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இந்நூல்கள் இலவசமாக வழங்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com