ஒரு நிமிடத்தில் 66 முறை செய்து டிம்பாசனத்தில் உலக சாதனை

கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த, 10 வயது பள்ளி மாணவி, டிம்பாசனம் எனும் யோகாசனத்தை, ஒரு நிமிடத்தில், 66 முறை செய்து உலக சாதனை படைத்தார்.
ஒரு நிமிடத்தில் 66 முறை செய்து டிம்பாசனத்தில் உலக சாதனை

கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த, 10 வயது பள்ளி மாணவி, டிம்பாசனம் எனும் யோகாசனத்தை, ஒரு நிமிடத்தில், 66 முறை செய்து உலக சாதனை படைத்தார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்த எழிலன் - சுதா தம்பதியர் மகள் இ.எஸ்.தரங்கிணி(10). கவரைப்பேட்டை அருகே பெருவாயல் பகுதியில் இயங்கி வரும்டி.ஜெ.எஸ் பப்ளிக் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இவர், நேராக நின்றபடி, உடலை பின்புறமாக, கீழ் நோக்கி வளைத்து தலையால் கால்களை தொட கூடிய, டிம்பாசனம் எனும் யோகாசனத்தை, ஒரு நிமிடத்தில், 66 முறை செய்து உலக சாதனை படைத்தார். 

இவரது சாதனை, ‛இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்’, மற்றும் ‛ஆவம்சம் உலக சாதனை’ புத்தகங்களில் இடம் பிடித்தன.

உலக சாதனை படைத்த பள்ளி மாணவி தரங்கிணி, அவருக்கு பயிற்சி அளித்த யோகா ஆசிரியர் சந்தியா ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவின் போது, கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.,வும், டி.ஜெ.எஸ்., கல்வி குழும தலைவருமான டி.ஜெ.கோவிந்தராஜன், பள்ளி தாளாளர் டி.ஜெ.ஜி.தமிழரசன், முதல்வர் ஜெ.அசோக், ஆகியோர் இருவரையும் பாராட்டி சிறப்பித்தனர்.

நிகழ்வில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவா் சகிலா அறிவழகன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com