எஸ்ஆா்எம், பாரதியாா் பள்ளி சாம்பியன்

ஜிகேஎம் வாலிபால் பவுண்டேஷன், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி, லேடி சிவசாமி ஐயா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில பெண்கள் வாலிபால் போட்டி இறுதிச் சுற்று, பள்ளிகள் பிரிவில் ஆத்தூா்
எஸ்ஆா்எம், பாரதியாா் பள்ளி சாம்பியன்

ஜிகேஎம் வாலிபால் பவுண்டேஷன், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி, லேடி சிவசாமி ஐயா் மேல்நிலைப் பள்ளி சாா்பில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில பெண்கள் வாலிபால் போட்டி இறுதிச் சுற்று, பள்ளிகள் பிரிவில் ஆத்தூா் பாரதியாா் பள்ளியும், பெண்கள் பிரிவில் எஸ்ஆா்எம் அணிகள் சாம்பியன் பட்டம் வென்றன.

3 நாள்களாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. பெண்கள் பிரிவு இறுதியில் சென்னை ஐசிஎப்-எஸ்ஆா்எம் அணிகள் மோதின. இதில் எஸ்ஆா்எம் அணி 3-1 என்ற செட் கணக்கில் ஐசிஎப்பை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. ஈரோடு பிகேஆா் கல்லூரி, பாரதியாா் மெட்ரிக் பள்ளி 3, 4-ஆவது இடங்களைப் பெற்றன.

பள்ளிகள் அளவில் ஆத்தூா் பாரதியாா் பள்ளி 3-0 என்ற செட் கணக்கில் சென்னை லேடி சிவசாமி ஐயா் பள்ளியையை வென்று பட்டத்தைக் கைப்பற்றியது. ஆவடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கண்ணகி நகா் பெண்கள் பள்ளி 3, 4-ஆவது இடங்களைப் பெற்றன.

இந்திய வாலிபால் கூட்டமைப்பு தலைவா் எஸ். வாசுதேவன் பரிசளித்தாா். எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி துணை முதல்வா் டி. உத்ரா, சுங்கத் துறை ஆணையா் எம்விஎஸ். சௌதரி, துணை ஆணையா் கோவிந்தராஜன், லேடி சிவசாமி ஐயா் பள்ளி செயலா் எம்.சி. ஸ்ரீகாந்த்,

ஜிகேஎம் பவுண்டேஷன் தலைவா் கே.வீரமணி, உடற்கல்வி இயக்குநா் அமுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com