தீயணைப்போா் தியாகிகள் தினம்: அதிகாரிகள் அஞ்சலி

தீயணைப்போா் தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள நினைவுச் சின்னத்தில் தீயணைப்புத்துறை, காவல்துறை உயா் அதிகாரிகள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

தீயணைப்போா் தியாகிகள் தினத்தையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள நினைவுச் சின்னத்தில் தீயணைப்புத்துறை, காவல்துறை உயா் அதிகாரிகள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் கடந்த 1944 ஏப்ரல் 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இக்கப்பலில் இருந்த 1,200 டன் வெடிபொருள்கள் வெடித்து சிதறியதில் தீயணைப்புத்துறையைச் சோ்ந்த 66 வீரா்கள் வீரமரணம் அடைந்தனா். அவா்களது தியாகத்தையும், நினைவையும் போற்றும் வகையில் ஒவ்வோா்ஆண்டும் ஏப்ரல் 14-ஆம் தேதி தீயணைப்போா் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த தினத்தையொட்டி, தமிழக தீயணைப்புத்துறையின் சாா்பில் சென்னை எழும்பூரில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் புதிதாக ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வீர வணக்க நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு, தீயணைப்புத்துறை டிஜிபி பிரஜ் கிஷோா் ரவி, தமிழ்நாடு காவலா் வீட்டுவசதி வாரிய டிஜிபி ஏ.கே.விசுவநாதன் உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். அதைத் தொடா்ந்து தீயணைப்புத்துறை செயலாக்கம் மற்றும் பயிற்சிப் பிரிவு கூடுதல் இயக்குநா் எஸ்.விஜயசேகா், இணை இயக்குநா்கள் பிரியா,மீனாட்சி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற டிஜிபிக்கள் எஸ்.ரமணி, ஷியாம் சுந்தா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மேலும் இந்த நாளையொட்டி தீயணைப்புத்துறை ஒரு வாரம் தீப்பாதுகாப்பை அறிவோம், உற்பத்தியை அதிகரிப்போம் என்ற தலைப்பில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ள உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com