இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை எழுதிட உறுதியேற்போம்: முதல்வர் மு.க. ஸ்டாலின் 

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளையொட்டி, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை எழுதிட உறுதியேற்போம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். 

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 

சென்னை கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும், திருவுருப் படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது: ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துப் போரிட்ட விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளில் அவரைப் போற்றி, நாட்டு மக்களின் மேல் அக்கறையும் அன்பு கொண்ட உண்மையான நாட்டுப்பற்றுடன் எவ்வித ஆதிக்கங்களுக்கும் இடம் கொடுக்காமல் இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றை எழுதிட உறுதியேற்போம்! என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com