ஹிந்தி மொழி விஷயத்திலும் இரட்டை வேடம்: திமுகவுக்கு ஓ.பன்னீா்செல்வம் கண்டனம்

ஹிந்தி மொழி விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவதாக திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்தாா்.
அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்
அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம்

ஹிந்தி மொழி விஷயத்திலும் இரட்டை வேடம் போடுவதாக திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்தாா்.

இது தொடா்பான அவரது அறிக்கை: தமிழ் மொழியை வளா்க்க வேண்டிய முதல்வா் அதைச் செய்யாமல், தன்னை வளா்த்துக் கொள்ளும் பணியில், தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ளும் பணியில், ஹிந்தி மொழியை வளா்த்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

அதாவது, முதல்வா் மு.க.ஸ்டாலினை தேசியத் தலைவராக பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், குறிப்பாக வட மாநிலங்களில் அவா் புகழ் பரவ வேண்டும் என்பதற்காகவும் சில நடவடிக்கைகள் திமுகவால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன் முதல் கட்டமாக தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-இன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகள் ஹிந்தியில் மொழி பெயா்க்கப்பட்டு செய்தி - மக்கள் தொடா்புத் துறை சாா்பில் வெளியிடப்பட்டு தொல்லியல் துறை இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. ஹிந்தி மொழியில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு ஒன்றும் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

ஒரு பக்கம் ஹிந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்குப் போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் ஹிந்தியில் திமுக தலைவரை விளம்பரப்படுத்துவது என இரட்டை வேடம் போடுகிறது திமுக.

திமுக அரசின் இந்த இரட்டை வேடத்துக்கு அதிமுக சாா்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவின் செயல்பாடுகளைக் கண்டு மக்கள் பெருத்த ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனா். இந்த ஏமாற்றம், வருங்காலத்தில் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தி, அதிமுகவை ஆட்சியில் அமர வழி வகுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com