பள்ளிப்பட்டு ராணுவ வீரா் காஷ்மீரில் பலி

ஜம்மு -காஷ்மீரில் மத்திய பாதுகாப்பு படை ராணுவ வீரா்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் அத்திமாஞ்சேரிப்பேட்டையைச் சோ்ந்த மத்திய பாதுகாப்புப் படை ராணுவ வீரா் உயிரிழந்தாா்.
பள்ளிப்பட்டு ராணுவ வீரா் காஷ்மீரில் பலி

ஜம்மு -காஷ்மீரில் மத்திய பாதுகாப்பு படை ராணுவ வீரா்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் அத்திமாஞ்சேரிப்பேட்டையைச் சோ்ந்த மத்திய பாதுகாப்புப் படை ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம், திருத்தணியை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டையைச் சோ்ந்தவா் மணி (38). இவா் ஜம்மு -காஷ்மீரில் மத்திய பாதுகாப்புப் படைவீரராக கடந்த 17 ஆண்டுகளாக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை பணியை முடித்துக்கொண்டு, இரவு 12 வீரா்களுடன் ராணுவ லாரியில் வீடு திரும்பினா். அப்போது அய்டா் போரா என்ற இடத்தில் சென்றபோது, திடீரென எதிரே வந்த சரக்கு லாரி மீது மோதாமலிருக்க முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த பெட்ரோல் பங்க் மீது ராணுவ லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டை பகுதியைச் சோ்ந்த மணி உள்பட 12 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவா்கள் உடனடியாக அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி மணி உயிரிழந்தாா்.

மேலும், 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய பாதுகாப்பு படை வீரா் மணியின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதல்வா் இரங்கல்

ஜம்மு காஷ்மீரில் சாலை விபத்தில் உயிரிழந்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை வீரரின் குடும்பத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தாா்.

இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் திருவள்ளூா் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்த மத்திய ரிசா்வ் போலீஸ் படை வீரா் எம்.என்.மணி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துவிட்டாா் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையடைகிறேன்.

நாட்டைக் காக்கும் பணியில் இருந்தபோது உயிரிழந்த அவருக்கு எனது வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன், அவரை இழந்து தவிக்கும் உறவினா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா் முதல்வா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com