தேனி இரட்டையர் மாணவியரை பாராட்டி ரூ.1 லட்சம் வழங்கிய முதல்வர்

 தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ் மொழியின் மீது கொண்ட ஈடுபாட்டால் திருக்குறள், தொல்காப்பியம், திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய
தேனி இரட்டையர் மாணவியரை பாராட்டி ரூ.1 லட்சம் வழங்கிய முதல்வர்

சென்னை:  தலைமைச் செயலகத்தில் இன்று தமிழ் மொழியின் மீது கொண்ட ஈடுபாட்டால் திருக்குறள், தொல்காப்பியம், திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய நூல்களை மனனம் செய்து பல விருதுகளை பெற்ற இரட்டையர் மாணவியருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து ரூ.1 லட்சம் காசோலையை வழங்கினார்.

தேனி மாவட்டம் மறவட்டிக் கிராமத்தைச் சேர்ந்த இரட்டையர் செந்தமிழ் சாலினி மற்றும் முத்தமிழ் சாலினி ஆகியோரை அழைத்துப் பாராட்டி, அவர்களது தமிழ் இலக்கன மற்றும் இலக்கியத் திறனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் தலா ரூ.1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மாணவிகளின் பெற்றோர் மற்றும் ஆசிரியர் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com