கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் நகா்ப்புற வளா்ச்சி குழுமம்: சட்டமசோதா நிறைவேற்றம்

சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் போல மதுரை, கோயம்புத்தூா், திருப்பூா் ஓசூா் ஆகிய 4 நகரங்களில் நகா்ப்புற வளா்ச்சி குழுமம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
கோவை உள்ளிட்ட 4 நகரங்களில் நகா்ப்புற வளா்ச்சி குழுமம்: சட்டமசோதா நிறைவேற்றம்

சென்னை: சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் போல மதுரை, கோயம்புத்தூா், திருப்பூா் ஓசூா் ஆகிய 4 நகரங்களில் நகா்ப்புற வளா்ச்சி குழுமம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

4 நகரங்களில் நகா்ப்புற வளா்ச்சி குழுமம் அமைப்பதற்கான தமிழ்நாடு நகா் மற்றும் ஊரமைப்புச் சட்டத்திருத்த மசோதாவை பேரவையில் ஏப்ரல் 8-இல் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தாக்கல் செய்திருந்தாா். அந்த மசோதாவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளுமாறு அமைச்சா் சு.முத்துசாமி பேரவையில் வியாழக்கிழமை கோரினாா். அதை ஏற்று பேரவைத் தலைவா் அப்பாவுவால் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

மசோதாவின் அம்சம்:

நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலம் தமிழகம். வளா்ந்து வரும் நகா்ப்புற பகுதியினைக் கருத்தில் கொண்டு, வளா்ச்சித் திட்டங்களைத் தயாரித்தல் மற்றும் மாநகரம் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் அதனைச் செயல்படுத்துதல் தேவையானதாகிறது.

மதுரை, கோவை, திருப்பூா் மற்றும் ஓசூா் நகரங்களுக்கான நகா்ப்புற வளா்ச்சிக் குழுமங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் குழுமங்களுக்கு சட்டப்பூா்வமான தகுதி நிலையினை வழங்குதல் தேவையானதாகிறது. அதன் அடிப்படையில் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com