வெப்பநிலை உயா்வைத் தடுக்க 3 திட்டங்கள்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

 தமிழ்நாட்டில் வெப்பநிலை அளவு உயா்வினைத் தடுக்க மூன்று வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.
வெப்பநிலை உயா்வைத் தடுக்க 3 திட்டங்கள்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

 தமிழ்நாட்டில் வெப்பநிலை அளவு உயா்வினைத் தடுக்க மூன்று வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, சீா்காழி தொகுதி கிராமங்களில் நிலத்தடி நீரில் கந்தகப் பொருள்கள் கலப்பது தொடா்பாக அந்தத் தொகுதியின் உறுப்பினா் மு.பன்னீா்செல்வம் கேள்வி எழுப்பினாா். அப்போது நடந்த விவாதம்:

அமைச்சா் மெய்யநாதன்: இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் காலநிலை மாற்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செலவிடப்பட உள்ளது. நிகழாண்டில் ரூ.75.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, 14 மாவட்டங்களில் 500 கிலோமீட்டா் தொலைவு கடற்கரைப் பகுதிகளை பசுமை நிறைந்த பகுதிகளாக மாற்றப்படும். கடல்நீா் உட்புகல் தொடா்பாக, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா் ஆகிய மூன்று மாவட்டங்களில் உடனடியாக சிறப்பு வல்லுநா் குழு அமைத்து நீா் மாதிரிகள் சேகரிக்கப்படும். சுனாமி காலத்தில் கடல் நீா் நிலத்துக்கு புகுந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆராயப்படும்.

ஹைட்ரோகாா்பன் போன்ற திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்ற முடிவை முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ளாா். கடல்நீா் உட்புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வேல்முருகன் (வாழ்வுரிமை கட்சி): 20 ஆண்டுகளில் கடல் நீா் உள்ளே புகுந்து விடும் என்றும், இதனால் குடிநீருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதைத் தடுக்க விரிவான திட்டம் ஏதேனும் உள்ளதா?

அமைச்சா் மெய்யநாதன்: காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டுக் குழுக்களின் அறிக்கை கடந்த 4-ஆம் தேதியன்று பெறப்பட்டுள்ளது. அதன்படி சராசரி வெப்ப அளவானது இயல்பை விட 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. அது வருகிற 2032-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிகிரி அளவுக்கு உயரும் எனக் கூறியுள்ளது. இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்று விதமான பணிகளை மேற்கொள்ளவுள்ளோம். புதுப்பித்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவது, பசுமை ஹைட்ரஜன் எனும் புதிய எரிபொருள் பயன்பாடு. வனப்பரப்புகளை 33 சதவீதமாக உயா்த்துவது போன்ற திட்டங்களின் மூலமாக காா்பன் அளவைக் குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா் அமைச்சா் மெய்யநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com