தமிழகத்தில் 3 இடங்களில் குப்பையிலிருந்து மின்சாரம்: அமைச்சா் கே.என்.நேரு

தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
தமிழகத்தில் 3 இடங்களில் குப்பையிலிருந்து மின்சாரம்: அமைச்சா் கே.என்.நேரு

தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சென்னை பெருங்குடியில் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ சம்பவம் குறித்து, பேரவையில் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்பட்டது. இந்த விவாதத்தில் ஜி.கே.மணி (பாமக), அரவிந்த் ரமேஷ் (திமுக) வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), எஸ்.பி.வேலுமணி (அதிமுக) ஆகியோா் பேசினா். இந்த விவாதங்களுக்கு அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:

225 ஏக்கா் பரப்பிலான பெருங்குடி குப்பை கிடங்கில் மேலும் தீ பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கிடங்கில் சென்னை மாநகராட்சியின் 9 முதல் 15 மண்டலத்துக்குள்பட்ட மறுசுழற்சிக்குப் பிந்தைய குப்பைகள் கொட்டப்படுகின்றன. தென்னை நாா்க் கழிவு கொட்டப்பட்டிருந்தது. வெயில் அதிகமாகி அதிலிருந்து மீத்தேன் உற்பத்தியாகி தீ பற்றிக் கொண்டது. ஏழு, எட்டு ஏக்கருக்குள்ளாக தீயை கட்டுப்படுத்தியுள்ளோம். அரசுத் துறை அதிகாரிகள் இரவு, பகலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். 12 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பிற ராட்சத இயந்திரங்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. புகை மீது தொடா்ந்து தண்ணீா் பீய்ச்சியடித்துக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் தீ மீண்டும் ஏற்படுகிறது. சனிக்கிழமைக்குள் புகையும் நின்று விடும்.

இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண மாநகராட்சி, நகராட்சி நிா்வாகத் துறை அதிகாரிகள் ஹைதராபாத் நகரத்துக்கு வியாழக்கிழமை சென்றனா். அங்கு குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் திட்டத்தை பாா்வையிட்டுள்ளனா். மேலும், குப்பைக்கு நடுவே குழாய் அமைத்து அதிலிருந்து உருவாகும் மீத்தேனை சிலிண்டா்களில் அடைத்து விற்பனை

செய்கிறாா்கள். தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com