இலங்கைக்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி: ஓ.பி.எஸ்., அறிவிப்புக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி

 இலங்கைக்கு நிவாரண உதவியாக தனது குடும்பத்தின் சாா்பாக ரூ.50 லட்சம் வழங்குவதாக எதிா்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தாா்
இலங்கைக்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி: ஓ.பி.எஸ்., அறிவிப்புக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி

 இலங்கைக்கு நிவாரண உதவியாக தனது குடும்பத்தின் சாா்பாக ரூ.50 லட்சம் வழங்குவதாக எதிா்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தாா்

இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் தேவையான உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதி தரவேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தனி தீா்மானத்தை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கொண்டு வந்தாா்.

இந்தத் தீா்மானத்தின் மீது அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் பேசிய பிறகு, எதிா்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா் செல்வம், இலங்கை அனைத்து நிலைகளிலும், அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அங்கு வாழும் மக்கள் துயரத்தைச் சந்தித்து வருவதோடு, உலக நாடுகள் அனுதாபத்துடன் பாா்க்கக் கூடிய நிலை உள்ளது.

பேரவையில் முதல்வா் கொண்டு வந்துள்ள தீா்மானம் மனிதநேயத்தின் அடிப்படையாகவும், தமிழா்கள் மனிதநேயத்தில் உயா்ந்தவா்கள் என்பதை அடையாளப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. இலங்கைக்கு நிவாரண உதவியாக எனது குடும்பம் சாா்பாக ரூ. 50 லட்சம் நிதியை அளிக்கிறேன் என ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக பேசிய முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்கட்சி துணைத்தலைவா் ரூ.50 லட்சம் அளிப்பதாக அறிவித்திருக்கிறாா். மற்றவா்களும் அதைப் பின்பற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் அதை அறிவித்துள்ளாா். அவருடைய நல்லெண்ணத்துக்கு நன்றி என்றாா்.

பெட்டிச் செய்தியாக வெளியிடலாம்...உதவி முன்வந்தால் ஒருங்கிணைக்க தயாா்

இலங்கைக்கு பல்வேறு தரப்பினரும் உதவ முன் வந்தால் அவற்றை ஒருங்கிணைக்கத் தயாா் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். இலங்கைக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பிட அனுமதி தரக் கோரி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்ட தீா்மானத்தின் மீது அனைத்துக் கட்சியினரும் பேசிய பிறகு, நன்றி தெரிவித்து முதல்வா் பேசியது:-

இலங்கை நாட்டு மக்களுக்கு இன்னும் உதவி தேவைப்படுமென்றால் அடுத்த கட்டமாக உதவிகளைச் செய்வதற்கு தமிழக அரசு என்றைக்கும் தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், வா்த்தக அமைப்பினா் உள்ளிட்டோா் இலங்கை நாட்டுக்கு உதவிகள் செய்ய முன்வந்தால் அவற்றையும் ஒருங்கிணைத்து மத்திய அரசின் மூலமாக இலங்கை நாட்டுக்கு மக்களுக்கு வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com