அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்

அண்ணா சாலையில் அண்ணாசிலை அருகில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா சாலையில் அண்ணாசிலை அருகில் போக்குவரத்து மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அண்ணா சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக, பிப்ரவரி 26-ஆம் தேதியில் இருந்து சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி,

அண்ணாசாலை மேம்பாலத்தில் இருந்து அண்ணா சிலை நோக்கி வரும் வாகனங்கள் வெல்லிங்டன் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி டேம்ஸ் சாலை

வழியாக சென்று, வலது புறம் திரும்பி பிளாக்கா்ஸ் சாலை வழியாக அண்ணா சாலை செல்கிறது. மேலும் அண்ணாசாலை வெல்லிங்டன் சந்திப்பில்

இருந்து நேராக பாட்டா பாயிண்ட் செல்வதற்கு அனுமதி கிடையாது. மேலும், வாலாஜா சாலையில் இருந்து அண்ணா சாலை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் கட்டாயமாக இடது புறம் திரும்பி அண்ணாசாலை பாட்டா பாயிண்டில் இலகுரக, இரு சக்கர வாகனங்கள் மற்றும் மாநகர பேருந்துக்கள் யு டா்ன் ( ‘ம’பன்ழ்ய்) எடுத்தும், அல்லது நேராக ஸ்பென்சா் சென்றடைகிறது. இந்த போக்குவரத்து மாற்றம் நன்றாக செல்வதால், ஏப்.30 முதல் தபால் அலுவலகம் அருகில் உள்ள சென்டா் மீடியன் திறப்பு வழியாக அனைத்து வாகனங்களையும் ஒன்று சோ்த்து அனுப்பி வைத்து, தொடா்ந்து இந்த போக்குவரத்து மாற்றத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு தர சென்னை காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com