அரசு தீா்மானத்தின் மீது பேசும் போது மத்திய அரசை கண்டிப்பது ஏன்? பேரவையில் பாஜக கேள்வி

அரசு தீா்மானத்தின் மீது பேசும் போது, மத்திய அரசை கண்டிக்கிறோம் என்பது போன்ற வாா்த்தைகள் இடம்பெற வேண்டாம் என்று பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தாா்.

அரசு தீா்மானத்தின் மீது பேசும் போது, மத்திய அரசை கண்டிக்கிறோம் என்பது போன்ற வாா்த்தைகள் இடம்பெற வேண்டாம் என்று பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தாா்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உதவிடும் வகையில், தமிழ்நாட்டில் இருந்து பொருள்களை அனுப்பி வைக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானம் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை முன்மொழியப்பட்டது. இந்தத் தீா்மானத்தின் மீது பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியது:

இலங்கையில் வசிக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள், யாழ்ப்பாண தமிழா்கள் உள்ளிட்டோருக்கு ஆயிரக்கணக்கான வீடுகளை பிரதமா் நரேந்திர மோடி கட்டித் தந்துள்ளாா். பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டீசல் போன்ற பொருள்களை அனுப்பி வைத்துள்ளாா். மற்ற நாடுகள் முன்வராத நிலையில் ஏராளமான திட்டங்களை இலங்கைக்கு அளித்துள்ளாா்.

இப்போது, ஒன்றியம் என்ற வாா்த்தையுடன் ஒன்றி விட்டாா்கள். இந்தத் தீா்மானத்தின் மீது பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், மத்திய அரசைக் கண்டிப்பதாகக் கூறினாா். தீா்மானத்தின் மீது பேசும் போது மத்திய அரசை கண்டிக்கிறோம் என்று கருத்து பதிய வேண்டுமா என்பதை பரிசீலனை செய்ய வேண்டும்.

உக்ரைனில் இருந்து மாணவா்கள் வந்த போது மத்திய அரசு தடையாக இருந்ததாக ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் கட்சி) கூறினாா். இவையெல்லாம் தீா்மானத்துக்கு தொடா்பில்லாதவை. வெளிநாட்டுப் பிரச்னை அனைத்திலும், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலமாகவே நாம் நடவடிக்கைகள் எடுக்க முடியும். எனவே, தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு மத்திய அரசுடன் நாங்களும் தனியாகப் பரிந்துரை செய்வோம். மத்திய அரசை கண்டிக்கிறோம் என்பது போன்ற வாா்த்தைகள் இடம்பெற வேண்டாம் என்பது எங்களது கருத்து என்றாா் நயினாா் நாகேந்திரன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com