ஆவடி விமானப்படை நிலையத்தில் விமானப்படை துணைத் தளபதி எம்.வி.ராமாராவ் ஆய்வு

ஆவடி விமானப்படை நிலையத்தில் விமானப்படை துணைத் தளபதி எம்.வி.ராமாராவ் ஆய்வு மேற்கொண்டார்.
ஆவடி விமானப்படை நிலையத்தில் விமானப்படை துணைத் தளபதி எம்.வி.ராமாராவ் ஆய்வு
Updated on
1 min read

விமானப்படை தலைமையகத்தின் முதுநிலை வான் மற்றும் நிர்வாகப் பிரிவு துணைத் தளபதி ஏர்வைஸ் மார்ஷல் எம்.வி.ராமாராவ், ஆவடி விமானப்படை
நிலையத்தில் 03.08.2022 முதல் 05.08.2022 வரை ஆய்வு செய்தார்.

அவரை, ஆவடி விமானப்படை நிலையத்தின் ஏர் ஆபீசர் கமாண்டிங், ஏர் கமோடர் எஸ்.சிவகுமார் வரவேற்றார். ஆவடி விமானப்படை நிலையத்தின் பல்வேறு பணி தளங்கள், பிரிவுகளை பார்வையிட்ட ஏர் மார்ஷல், எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளதா? என்பது குறித்தும் மதிப்பீடு செய்தார்.

தமது இந்த ஆய்வின்போது அங்கு பணியாற்றும் வீரர்களுடனும் அவர் கலந்துரையாடினார். பணியாளர்களின் தொழில் திறன் மற்றும் மனஉறுதியை பாராட்டிய ஏர்மார்ஷல், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மேம்பாட்டிற்காக, நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மனநிறைவு தெரிவித்தார். 

சரக்குப் போக்குவரத்து மேலாண்மை. பராமரிப்பு, நிர்வாகம் மற்றும் பயிற்சிப் பிரிவுகளில் தொழில் தரத்தை நிலைநாட்டி வருவதற்காக இந்த நிலையத்தின் அனைத்துப் பணியாளர்களையும் ஏர்மார்ஷல் பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com