அண்ணாமலை பல்கலை.யில் அதிதொழில்நுட்ப அச்சு இயந்திரம்: துணைவேந்தர் தொடக்கிவைத்தார்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அதிதொழில்நுட்ப அச்சு இயந்திரத்தை துணைவேந்தர் ராம. கதிரேசன் தொடக்கிவைத்தார்.
அண்ணாமலை பல்கலை.யில் அதிதொழில்நுட்ப அச்சு இயந்திரம்: துணைவேந்தர் தொடக்கிவைத்தார்

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அதிதொழில்நுட்ப அச்சு இயந்திரத்தை துணைவேந்தர் ராம. கதிரேசன் தொடக்கிவைத்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் சுமார் 1,40,000 மாணவர்கள் பல்வேறு வகையான பாடப்பிரிவுகளில் தொலைதூரக்கல்வி வாயிலாக பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அச்சகத்தில் இருந்து அச்சிடப்பட்டு வழங்கப்படுகிறது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அச்சகத்தில் அதி தொழில் நுட்பத்துடன் கூடிய (Multi Functional Production ) இயந்திரத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முதுமுனைவர் ராம. கதிரேசன், பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் கே.சீதாராமன் மற்றும் தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் ஆர்.சிங்காரவேல் முன்னிலையில் துவக்கி வைத்தார்கள்.

இந்த புதிய அச்சு இயந்திரம் அதிநவீன தொழில்நுட்பம் நிறைந்தது. இதன் மூலம் பாடப் புத்தகங்களை விரைவாக அச்சடித்து மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்க ஏதுவாக இருக்கும் என துணைவேந்தர் தெரிவித்தார்.

விழாவினை அண்ணாமலைப் பல்கலைக்கழக அச்சக உதவி பணி மேலாளர் மணிகண்டன்  ஏற்பாடு செய்திருந்தார். 

விழாவில் மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தினசம்பத், துணைவேந்தரின் நேர்முக செயலாளர்  பாக்கியராஜ், உதவி பதிவாளர்  ஸ்ரீதேவி மற்றும் துறைத் தலைவர்கள், பிரிவு தலைவர்கள், அச்சகப் பிரிவு ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com