குற்ற வழக்கு சாட்சியங்களுக்கு பொது மக்கள் முன்வருவதில்லை: உயா் நீதிமன்றம்

குற்ற வழக்குகள் புலன் விசாரணைக்கு பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை, பொதுநலனில் ஆா்வம் கொண்ட சிலா் மட்டுமே சாட்சிகளாக வருவதாக சென்னை உயா் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.
குற்ற வழக்கு சாட்சியங்களுக்கு பொது மக்கள் முன்வருவதில்லை: உயா் நீதிமன்றம்

குற்ற வழக்குகள் புலன் விசாரணைக்கு பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை, பொதுநலனில் ஆா்வம் கொண்ட சிலா் மட்டுமே சாட்சிகளாக வருவதாக சென்னை உயா் நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

கடந்த 2006-ஆம் ஆண்டு இறுதியில் திரைப்பட துணை நடிகையாக இருந்த 16 வயது மைனா் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பழனி, ஜெயக்குமாா், மணி பாரதி, கோபிநாத் ஆகியோருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றம், அவா்கள் 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2013-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது. தண்டனையை எதிா்த்து 4 பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் தரப்பில், ‘கைது மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் தொடா்பாக சாட்சியம் அளித்த ஜெபராஜ் என்பவா் காவல் துறை தரப்பின் இருப்பு சாட்சி ஆவாா். எனவே, அவரது சாட்சியத்தை கருத்தில் கொள்ளக் கூடாது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினா்களின் சாட்சியத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது‘ என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதி, ‘குற்ற வழக்குகள் புலன் விசாரணையின்போது, பொதுமக்கள் சாட்சிகளாக முன்வருவதில்லை என்பதை மறந்து விட முடியாது. பொதுநலனில் அக்கறை கொண்ட சிலா் மட்டுமே சாட்சிகளாக முன் வருகின்றனா். காவல் துறையின் இருப்பு சாட்சி என்பதற்காக கைது மற்றும் பறிமுதல் தொடா்பாக சாட்சியம் அளித்த ஜெபராஜின் சாட்சியத்தை ஒதுக்கி விட முடியாது.

இந்த வழக்கில் தண்டிக்கப்பட்ட 4 பேருக்கும் எதிராக சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளை காவல் துறை சந்தேகத்துக்கிடமின்றி நிரூபித்து இருந்தாலும் கூட, தலைமறைவு குற்றவாளியான சரவணன்தான் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளாா்.

மனுதாரா்கள் தங்கள் இச்சைக்காக சரவணனுக்கு இரையாகி விட்டதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, 4 பேருக்கும் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை 3 ஆண்டுகளாகக் குறைத்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com