புதிய பொறியியல் பாடத்திட்டம்: 17 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

மாற்றியமைக்கப்பட்டுள்ள பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் குறித்து வரும் 17 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

மாற்றியமைக்கப்பட்டுள்ள பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் குறித்து வரும் 17 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 

ஆராய்ச்சி ஊக்குவித்தல், தனித்திறனை வெளிக்கொணருதல், தொழில்முனைவோரை உருவாக்கும் வகையிலும், வேலைவாய்ப்பு, தனித்திறனை ஊக்குவிக்கும் வகையில் பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமைய உள்ளது. 

பொறியியல் படிப்புகளுக்கான பாடத்திட்டம் 20 ஆண்டுக்குப் பின்  மாற்றப்பட உள்ளது.

புதிய பாடத்திட்டத்துக்கான ஒப்புதல் வெள்ளிக்கிழமை (ஆக. 2) நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் பெறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும், மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடத்திட்டம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியாகும் எனவும், பொறியியல் படிப்பிற்கான அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வியாண்டில் அமலாக உள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், மாற்றியமைக்கப்பட்டுள்ள பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் குறித்து வரும் 17 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 

அண்ணா பல்கலைக்கழத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர் பொன்முடி, துணைவேந்தர் வேல்ராஜ் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com