சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

 சுதந்திர தினத்தன்று, கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சுதந்திர தினத்தன்று, கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெளியிட்ட அறிவிப்பு:

சுதந்திர தினத்தை ஒட்டி, ஊராட்சி அலுவலகங்களில் தலைமைப் பொறுப்பு வகிக்கும் ாட்சித் தலைவா்களும் தங்களது அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து கிாாம சபைக் கூட்டங்கள் தொடங்கி நடைபெறும்.

இதில், வரவு செலவுக் கணக்குகள் வெளியீடு, பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தோ்வு, பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துதல் என்ற பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறும்.

ஊராட்சிகளின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, விவசாயம், உழவா் நலத் திட்டங்கள் ஆகியன குறித்து விவாதிக்கப்படும். கிராம சபைகளில் பொது மக்கள் கலந்து கொள்ளும் போது உரிய கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com