வெளிச் சந்தையில் தமிழக அரசின் புதிய உப்பு விற்பனை: முதல்வா் மு.க.ஸ்டாலின்தொடக்கி வைத்தாா்

 வெளிச் சந்தையில் தமிழக அரசு புதிய உப்பு விற்பனை செய்யப்பட உள்ளது. நெய்தல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உப்பினை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிமுகம்
வெளிச் சந்தையில் தமிழக அரசின் புதிய உப்பு விற்பனை: முதல்வா் மு.க.ஸ்டாலின்தொடக்கி வைத்தாா்

 வெளிச் சந்தையில் தமிழக அரசு புதிய உப்பு விற்பனை செய்யப்பட உள்ளது. நெய்தல் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உப்பினை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்து வைத்தாா். இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

கடந்த 2021-22-ஆம் ஆண்டுக்கான தொழில் துறை மானியக் கோரிக்கையில், நெய்தல் உப்பு குறித்த அறிவிப்பு

வெளியிடப்பட்டது. அதன்படி, அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியன நெய்தல் என்ற புதிய வணிகப் பெயரில் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, நெய்தல் உப்பினை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கின. அயோடின் கலந்த கல் உப்பு மற்றும் அயோடின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தூள் உப்பு ஆகியவற்றின் வெளிச் சந்தை விற்பனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

உப்பளத் தொழிலாளா்கள்: உப்பு உற்பத்தி பாதிக்கப்படும் காலங்களில் உப்பளத் தொழிலாளா்களின் சிரமத்தைப் போக்க, ஆண்டுக்கு ஒருவருக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், உப்பு உற்பத்தி இல்லாத அக்டோபா் முதல் டிசம்பா் மாதங்கள் வரையிலான காலத்தில் ரூ.5,000 நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சிகளில், தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், தொழிலாளா் நலத் துறை ஆணையாளா் அதுல் ஆனந்த், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கு.ராசாமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com