
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற புகைப்படக் கண்காட்சியினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார்.
நாட்டின் சுதந்திர நாளை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடி ஏற்றினார்.
இதையும் படிக்க | சுதந்திர நாள்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டது கூகுள்!
இதையடுத்து சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் முழு உருவச் சிலையினை திறந்துவைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து 'விடுதலைப் போரில் தமிழகம்' என்ற தலைப்பில் விடுதலைப் போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியினை திறந்துவைத்து பார்வையிட்டார். நாட்டின் சுதந்திரத்திற்கு அவர்கள் செய்த தியாகத்தைப் போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் ஸ்டாலின்