டிஜிபி மீது பெண் எஸ்.பி. பாலியல் புகாரளித்த வழக்கில், களவை விசாரிக்கும் நீதிமன்றத்திலேயே ஆவணங்கள் களவு போவதா? என்று மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், 2021-ம் ஆண்டில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணிக்கு சென்றிருந்தபோது, சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெண் எஸ்.பி. புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | பயணிகளின் விவரங்களை பகிரும் தகவல் கற்பனையானது: இந்திய ரயில்வே
இந்நிலையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த, சிறப்பு டிஜிபி, பெண் எஸ்.பி.யிடம் செல்போனில் பேசிய உரையாடல் பதிவுகள், வாட்ஸ்-அப் பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருப்பதை அறிந்த நீதிபதி அதிர்ச்சியடைந்து, அவற்றைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முக்கியமான வழக்கில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களே காணாமல்போவது ஏற்புடையதல்ல. இது, காவல், நீதித்துறை மீதான நம்பிக்கையை சிதைக்கும். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, இனியும் இதுபோல நேரிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெற்றித் தறி விற்பனை நிலையங்கள்: முதல்வர் விஜய் தொடங்கிவைத்தார்

அதிரடியில் மிரட்டிய ஆஷிக்; திருப்பூர் தமிழன்ஸுக்கு 206 ரன்கள் இலக்கு!

பங்குச் சந்தை சரிவு: சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும், நிஃப்டி 24,550க்கு அருகில் சென்று நிறைவு!!

2026-ன் முதல் 6 மாதங்களில்..! பாகிஸ்தானில் 1,900 குழந்தை வன்கொடுமை வழக்குகள்!
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp



