மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை நவநீத பெருமாள் கடந்த திங்கள்கிழமை இரவு குதிரை வாகனத்தில் எழுந்தருளி பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட நவநீதப் பெருமாள் கோயில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருக்கூடல் மலையில் உள்ளது.
இதையும் படிக்க.. குரூப் 5ஏ தேர்வு: அறிவிப்பாணை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
ஒவ்வொரு ஆண்டும் ஆடி பௌர்ணமி நாளில் திருக்கூடல்மலை நவநீதப் பெருமாள் புறப்பாடாகி கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள் நடமாடிய மானாமதுரை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வந்து மீண்டும் திருக்கூடல் மலை திரும்புவது வழக்கம்.
அதன்படி கடந்த ஆடி பௌர்ணமி நாளில் திருக்கூடல்மலையிலிருந்து பல்லக்கில் புறப்பாடாகிய நவநீத பெருமாள் பல்வேறு ஊர்களில் எழுந்தருளி கடந்த திங்கள்கிழமை மாலை மானாமதுரை நகருக்குள் வந்தடைந்தார். இரவு தாயமங்கலம் செல்லும் சாலையில் உள்ள சுப்பிரமணியர் கோவிலில் குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வீதி உலா வந்து அதன் பின் அலங்கார குளம் அருகே ஒருங்கிணைந்த குலாலர் சமூக நலச் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட வைகைக்கரை அய்யனார், சோணையா சுவாமி கோயிலுக்கு வந்தடைந்தார். அங்கு பரம்பரை நிர்வாக அறங்காவலர் வி.காளீஸ்வரன் தலைமையில் நவநீதப் பெருமாளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன்பின் அங்கு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து நவநீதப் பெருமாளுக்கு பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர். இதையொட்டி கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
பின்னர் இங்கிருந்து புறப்பட்ட நவனீதப் பெருமாள் இரவு அரசு மருத்துவமனை அருகே உள்ள சங்கு பிள்ளையார் கோயிலில் தங்கினார. செவ்வாய்க்கிழமை காலை இங்கிருந்து பல்லக்கில் புறப்பாடாகிய பெருமாள் மானாமதுரை பகுதியில் பல்வேறு கிராமங்களில் எழுந்தருளி அருள்பாலித்து கட்டிக்குளம் சென்றடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உளவாளியாக நடிக்கும் தனுஷ்?

புதிய புரட்சி! விஜய்க்கு வாழ்த்துக்கள்! தமிழிசை சௌந்தரராஜன் | BJP | TVK

முதல் விக்கெட் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரரின் வித்தியாசமான கொண்டாட்டம்..! துண்டுச் சீட்டில் இருந்தது என்ன?

இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன்: மமதா பானர்ஜி
வீடியோக்கள்

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு


